நின்னை வணங்கி நீ வகுத்த நெறியில் நிற்பதல்லால்....
பாட்டரசன் கம்பன் பள்ளிப் படை கொண்ட நாட்டரசன் கோட்டையில் நடக்கும் பங்குனி அத்தத்திருநாளைய கம்பன் திருநாள் நிகழ்வில் மறக்கமுடியாத வண்ணம் அமைவது மலர் வணக்கம். கம்பன்அடிப்பொடியார் வகுத்தளித்த வண்ணம், அருட்கவி ஐந்து பாடல்களும் (திருவையாற்றுப் பஞ்சரத்னக்கீர்த்தனைபோல) கம்பன் மலர்வணக்கப் பாடலும் ஏற்படுத்தும் உணர்வலைகள் உன்னதமானவை. வழிபாட்டு நிலையில் தன்னை மறந்து கம்பனை நினைந்து கசிந்துருகும் அண்ணன் கம்பன்அடிசூடி பழ.பழனியப்பன் அவர்களுக்கு உதவும் ஒரு சிற்றணிலாய்... படம் நன்றி- சுப்பு அண்ணன்
நன்றி சேதுபதி
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக