செவ்வாய், 25 ஏப்ரல், 2017

80ல் ஒரு சுற்று வருகிறது கம்பன் மேடை

காரைக்குடி கம்பன் கழகம் கம்பனடிப்பொடி சா. கணேசனார் நடத்தி மீனாட்சி பள்ளிக்கு மீண்டும் இலக்கிய ஊர்வலம் எடுக்கச் செல்கிறது.


காரைக்குடி கம்பன் கழகத்தின் மே மாதக் கூட்டம் 2017

ரைக்குடி கம்பன் கழக மே மாதக் கூட்டம் 2017

  

மே மாதக் கூட்டம் (2017)


எண்பதாம் ஆண்டுத் தொடக்க மாதக் கூட்டம்


கம்பன் புகழ்பாடிக் கன்னித்தமிழ் வளர்க்கும் காரைக்குடி கம்பன் கழகத்தின் முத்துவிழாப் புத்தாண்டில்

முதற் சிறப்புக் கூட்டம் 6-5-2017 ஆம் நாள் சனிக்கிழமை மாலை 5.30 மணிக்கு

கம்பன் அடிப்பொடி சா. கணேசன் முன்னாளில் கம்பன் புகழ்பாடிக் களித்த காரைக்குடி சிவன் கோயில் தெற்குவீதியில் அமைந்துள்ள

மீனாட்சி பெண்கள் மேல்நி்லைப்பள்ளி வளாகத்தில் நடைபெறுகிறது.

அவ்வயம் ஆழ்வார் ஆய்வுமையத்தினை நிறுவி ஆழ்வார்கள் அருள் அமுதத்தையும் கம்ப நாட்டாழ்வார் கவின் கவிக் கனிச்சாறையும் பல்லோரும் பல்லாண்டுகளாகப் பருகப் பெருங்கொடையளித்து வைணவப் பாற்கடலை வாய் மணக்க உண்டு செவி மணக்கச் சிந்தி மகிழும் செந்தமிழ்ப் பேரறிஞர்களுக்கு விருதுகளும் வழங்கிப் புரவலராக விளங்கவதோடு இப்போது எம்பெருமானார் எதிகட்கு இறைவனாம் எதிராசர் மதத்தில் புரட்சி செய்த மகான் இராமானுசர் ஆயிரமாம் திருநட்சத்திரத்திரப் பெருவிழாக்கண்டு நாமெல்லாம் மொண்டு உண்டு மகிழ நூற்றுப் பதினான்கு நூல்கள் எழுதி உடையவர் புகழ்பாடி உன்னதத் தமிழை உள்ளன்பால் வழுத்தி வாயினால் பாடி மனத்தினால் சிந்திக்கச் செய்து போய பிழையும் புகுதருவான் நின்றனவும் தீயினில் தூசாகச் செய்தருளும் வள்ளல்

டாக்டர் எஸ். ஜகத்ரட்சகன் அவர்களின்

நற்றமிழ்த் தொண்டிற்கு நன்றி பாராட்டி

ஆழ்வார் அனுஜர்

எனும் விருதுப் புகழாரம் சூட்டி மகிழ்கிறோம்.

டாக்டர் சுதா சேஷய்யன் அவர்கள் தலைமையேற்று பாரட்டுரையும், ஆழ்வார் இராமானுஜர் அமுது உரையும் அருளிச்சிறப்பிக்கிறார்கள். அன்பர்கள் யாவரும் கலந்து கொண்டுக் கன்னித்தமிழ்ப் பருகிட வருக. வருக.

-----------------------------------------------------------------------------

நிகழ்ச்சி நிரல் (மாலை 5.30 மணி முதல்)

இறைவணக்கம்

செல்வி கிரேசி


வரவேற்பரை- 

திரு கம்பன் அடிசூடி பழ. பழனியப்பன்


தலைமை உரையும் பாரட்டுரையும்

ஆழ்வார் இராமானசர் புகழ் அருளுரையாய்

டாக்டர் சுதா சேஷையன்

ஆழ்வார் அனுஜர் விருது வழங்கல்

திரு. அரு. வே. மாணிக்கவேலு

விருதுரை ஆக்கமும் வாசித்தலும்

கவிஞர் கிருங்கை சேதுபதி

கம்பன் கழக முத்துவிழாத் தொடக்க வாழ்த்துரை

1947 ஆம் ஆண்டு ஒன்பதாம் ஆண்டுக் கமபன் விழாவில் திரு.விக. தலைமையில் பங்கேற்று வாழ்க உலகம் என வாழ்த்திய மூதறிஞர் கவிஞர்

ரெ. முத்துக்கணேசனார்


ஏற்புரையும் அமுத உரையும்

ஆழ்வார் அனுஜர் டாக்டர் எஸ். ஜகத்ரட்சகன்

நன்றியுரை

பேரா. மு.பழனியப்பன்.

விருந்தோம்பல்

நிகழ்ச்சி உதவி

நமது செட்டிநாடு மாத இதழ்

அருவே. மாணிக்கவேலு சரசுவதி அறக்கட்டளை

தம் தாயார் காரைக்குடி மெ.செ. அ.பழ. செட்டிச்சி ஆச்சி என்ற உண்ணாமலை ஆச்சி நினைவாக அவர்தம் புதல்வர் திரு. ப. அ. பழனியப்பன் (சோலை) உண்ணாமலை தம்பதியர்

வெள்ளி, 24 மார்ச், 2017

காரைக்குடி கம்பன் கழகத்தின் ஆண்டுவிழா, கம்பன் திருவிழா அழைப்பு

காரைக்குடி கம்பன் கழகம் நடத்தும் கம்பன் திருவிழா நிகழ் நிரல்
நாள்: 7- 4 - 2017, மகநாள், வெள்ளிக்கிழமை, மாலை 5.00 மணி
இடம்: கிருஷ்ணா கல்யாண மண்டபம், கல்லுக்கட்டி , காரைக்குடி
தலைவர்:  பேராசிரியர் தி. இராசகோபாலன்
இறைவணக்கம்             :திருமதி லெட்சுமி கிருஷ்ணமூர்த்தி
மலர் வணக்கம்            : திருமதி ராதா ஜானகிராமன்
கம்பன் அடிப்பொடி அஞ்சலி
வரவேற்புரை               : திரு கம்பன் அடிசூடி
தொடக்கவுரை              : பேராசிரியர் ந. விஜயசுந்தரி
கம்பன் அடிசூடி பழ.பழனியப்பன் எழுதி வானதி பதிப்பகம் வெளியிடும்
மீனாட்சி பழனியப்பா அறக்கட்டளைச் சொற்பொழிவு நூல் கைகேயி படைத்த கம்பன் வெளியீடு : திரு. நாஞ்சில் நாடன்
அமெரிக்கன் கல்லூரி மேனாள் துணை முதல்வரும், கணினித் துறை இயக்குநருமான முனைவர் ப. பாண்டியராஜா அவர்களுக்கு அவர்தம் கம்பராமாயணம் தொடரடைவு (www. tamilconcordance.in) பணிகளைப் பாராட்டி கம்பன் கழகம் பணிவுடன் அளிக்கும் காரைக்குடி தெ. இலக்குவன் நினைவைப் போற்றி அவர்தம் குடும்பத்தார் நிறுவியுள்ள கம்பன் அடிப்பொடி விருது வழங்கிப் பாராட்டு         : சாகித்திய அகாதமி விருதுபெற்ற
எழுத்தாளர் திரு நாஞ்சில் நாடன்
கம்பனின் இராம வண்ணம்       ஸ்ரீவில்லிப்புத்தூர் திரு. பி. ராஜாராம்
மாணக்கர்களுக்குப் பரிசளிப்பு           திருமதி வள்ளி முத்தையா
தலைமை உரை                 பேராசிரியர் தி. இராசகோபாலன்
காரைக்குடி கம்பன் கழகம் நடத்தும் கம்பன் திருவிழா நிகழ் நிரல்
நாள்: 8 - 4 - 2017, பூர நாள், சனிக்கிழமை, மாலை 5.30 மணி
இடம்: கிருஷ்ணா கல்யாண மண்டபம், கல்லுக்கட்டி , காரைக்குடி

தனிப்பேருரை
கம்பனின் கருத்து வண்ணம்
சிந்தனைச் சிற்பி
திரு. பழ. கருப்பையா
கவியரங்கம்
தலைவர்:
கவிச்சுடர் கவிதைப் பித்தன்
தலைப்பு:
கம்பனின் கவி வண்ணத்தில்
பொருள்                     கவிவாணர்
அன்பு                 திரு. அ.கி. வரதராஜன்
அறம்                திரு கிருங்கை சேதுபதி
தோழமை            திரு. தஞ்சை இனியன்
தொண்டு             திரு. வீ.கே. கஸ்தூரிநாதன்
காதல்                திரு. வீ.ம. இளங்கோவன்
வீரம்                 திரு வல்லம் தாஜ்பால்
காரைக்குடி கம்பன் கழகம் நடத்தும் கம்பன் திருவிழா நிகழ் நிரல்
நாள்: 9 - 4 - 2017, உத்தர நாள், ஞாயிற்றுக்கிழமை, காலை 9.30 மணி
இடம்: வள்ளல் அழகப்பர் அவர்தம் பேத்தி கவிதாயினி வள்ளி முத்தையா அவர்களின் பாரம்பரியமான நூற்றாண்டு கடந்த செட்டிநாட்டு இல்லம் கோட்டையூர்
செட்டிநாடும் செந்தமிழும் என்ற தலைப்பிலான
உலகத் தமிழ் பன்னாட்டுக் கருத்தரங்கம் - தொடக்கவிழா
தலைமை   : திரு. இராஜாமணி முத்துக்கணேசன்
வரவேற்புரை: திரு கம்பன் அடிசூடி
தொடக்கவுரை: செட்டிநாட்டு இளவல் செட்டிநாடு குழும நிர்வாக இயக்குநர்
திரு எம்.ஏ. எம் ஆர். முத்தையா
சிங்கப்பூர் கவிஞர் திரு. அ.கி. வரதராஜன் எழுதிய வானதி பதிப்பகம் வெளியீடான அரிய மாமனிதர் அழகப்பர் கவிதைநூல் வெளியீடு:
கவிதாயினி வள்ளி முத்தையா
முதற்பிரதியினைப்  பெற்றுத் தலைமைஉரை நமது செட்டிநாடு இதழ்ப் புரவலர் செட்டிநாடு சிமெண்ட்ஸ் இயக்குநர் திரு. இராஜாமணி முத்துகணேசன்
ஏற்புரை: கவிஞர் திரு. அ.கி . வரதராஜன்
மையக் கருத்துரையும் ‘செட்டிநாடும் செந்தமிழும்’ ஆய்வுக்கோவை வெளியீடும்
திரைப்பட இயக்குநர் திரு. கரு. பழனியப்பன்
முதற்பிரதியினைப் பெற்று வாழ்த்துரை: திரு.அரு.வே. மாணிக்கவேலு
முற்பல் 11 மணி மதல் உணவு இடைவேளை வரை பேராளர்கள் ஐந்து அமர்வுகளாக வெவ்வேறு இடங்களில் தத்தம் கட்டுரைகளை அறிமுகப்படுத்திச் சுருக்கத்தினை மட்டும் வாசித்தளிப்பர்
காரைக்குடி கம்பன் கழகம் நடத்தும் கம்பன் திருவிழா நிகழ் நிரல்
நாள்: 9 - 4 - 2017, உத்தர நாள், ஞாயிற்றுக்கிழமை, பிற்பகல் 3.00  மணி
இடம்: வள்ளல் அழகப்பர் அவர்தம் பேத்தி கவிதாயினி வள்ளி முத்தையா அவர்களின் பாரம்பரியமான நூற்றாண்டு கடந்த செட்டிநாட்டு இல்லம் கோட்டையூர்
செட்டிநாடும் செந்தமிழும் என்ற தலைப்பிலான
உலகத் தமிழ் பன்னாட்டுக் கருத்தரங்கம் – நிறைவு விழா
இறைவணக்கம்
வரவேற்புரை
பேராசிரியர் மா. சிதம்பரம்
தலைமையுரையும்
சிறந்த ஆய்வுக் கட்டுரைகளுக்குப் பரிசு வழங்குதலும்
தகைமிகு தஞ்சாவூர் மூத்த இளவரசர்
திரு. பாபாஜி ராஜாசாகிப் போன்ஸ்லே
நிறைவுரை
கவிஞர் திரு. சொ. சொ. மீ. சுந்தரம்
நன்றியுரை
பேராசிரியர் செ. செந்தமிழ்ப்பாவை

(கருத்தரங்கிற்கு வரும் கட்டுரையாளர்களுக்கும், நோக்கர்களுக்கும் மதியஉணவு ஏற்பாடு செய்யப்பெற்றுள்ளது)

காரைக்குடி கம்பன் கழகம் நடத்தும் கம்பன் திருவிழா நிகழ் நிரல்
நாள்: 9 - 4 - 2017, உத்திர நாள், ஞாயிற்றுக் கிழமை, மாலை 5.30 மணி
இடம்: கிருஷ்ணா கல்யாண மண்டபம், கல்லுக்கட்டி , காரைக்குடி
பட்டிமண்டபம்
நடுவர்: சொல் வேந்தர் திரு. சுகி.சிவம்
தலைப்பு
இராமனுக்கு மிகுதியும் இக்கட்டான சூழலை உண்டாக்கியவர் யார்?
கைகேயியே!
பேராசிரியர் து. ருக்மணி,
செல்வி நா. ஹேமலதா,
பேரா சுமதிஸ்ரீ
சுக்ரீவனே!
பேராசிரியர் புனிதா ஏகாம்பரம்,
திரு.த.க. தமிழ்பாரதன்,
பேரா. தமிழ்திருமால்
வீடணனே!
தமிழாகரர் பழ. முத்தப்பன்,
திரு. சு. சதீஸ்குமார்,
பேரா. மா.சிதம்பரம்

காரைக்குடி கம்பன் கழகம் நடத்தும் கம்பன் திருவிழா நிகழ் நிரல்
நாள்: 10 - 4 - 2017, அத்தத் திரு நாள், திங்கட் கிழமை, மாலை 5.00 மணி
இடம்: நாட்டரசன் கோட்டை, கம்பன் அருட்கோவில்
தலைவர் தவத்திரு குன்றக்குடி பொன்னம்பல அடிகளார்
கம்பன் அருட்கோயில் வழிபாடு
மலர் வணக்கம் திரு. ஜி.எஸ். வி. பைரவ குருக்கள்
கம்பன் அருட்கவி ஐந்து
அமிர்தவர்ஷினி இசைப்பள்ளி ஆசிரிய மாணாக்கர்
இயக்கம் திரு. த. வெற்றிச்செல்வன்
இறைவணக்கம்
வரவேற்புரை
திரு. கண. சுந்தர்
தலைவர் உரை
‘‘கம்பனின் ஆற்றல் வண்ணம்’’
திரு. வி. யோகேஷ்குமார்
‘‘கம்பனின் பாத்திர வண்ணம்’’
திரு. இரா. மாது
நன்றியுரை பேரா. மு.பழனியப்பன்

வாழிய செந்தமிழ்

சனி, 21 ஜனவரி, 2017

காரைக்குடி கம்பன் கழகம் நடத்தும் ‘செட்டிநாடும் செந்தமிழும் என்ற தலைப்பிலான பன்னாட்டுக் கருத்தரங்கம் (2017) அறிவிப்புமடல்

           
காரைக்குடி கம்பன் கழகம் நடத்தும் ‘செட்டிநாடும் செந்தமிழும்  என்ற தலைப்பிலான பன்னாட்டுக் கருத்தரங்கம் (2017) அறிவிப்புமடல்
       கம்பராமாயணம் குறித்த செழுமையான ஆய்வுத்திறனை வளர்க்க வேண்டி, 2013, 2014, 2016 ஆம் ஆண்டுகளில் பன்னாட்டுக் கருத்தரங்குகளைக் காரைக்குடி கம்பன் கழகம் நடத்தியது. இவ்வாண்டு (2017) செட்டிநாடும் செந்தமிழும் என்ற தலைப்பில் ஒரு பன்னாட்டுக் கருத்தரங்கம் நடத்த உள்ளோம். இக்கருத்தரங்கில் தாங்கள் கலந்து கொண்டுச் சிறப்பிக்க அன்புடன் வேண்டுகிறோம்.
கருத்தரங்க நாளும், இடமும்,  நிகழ்வுகளும்
                . இப்பன்னாட்டுக் கருத்தரங்கம் கோட்டையூரில் அமைந்துள்ள வள்ளல் அழகப்பர் அவர்களின் பூர்வீக இல்லத்தில் கவிதாயினி வள்ளிமுத்தையா அவர்களின் வரவேற்பில் செட்டிநாட்டு்ப் பாரம்பரியத்துடன 2017 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம், 9 ஆம் நாள் ஞாயிற்றுக்கிழமை அன்று நடைபெற உள்ளது. கருத்தரங்கம் நிகழும் நாளன்றே ஆய்வுக்கோவையும் வெளியிடப்பெறும். அன்று முற்பகல் தொடக்கவிழாவும் பல அரங்குகளில் கட்டுரை வாசி்ப்புகளும் நிகழ உள்ளன. மதியம் 3.00 மணியளவில் இக்கருத்தரங்கு முடிந்து காரைக்குடி கம்பன்கழகம் நடத்தும் ஆண்டுவிழாவில் பங்கேற்கவும் வசதி செய்யப்பெற்றுள்ளது. ஏப்ரல் 6,7.8, 9  ஆகிய நாட்களில் காரைக்குடி கம்பன் கழகத்தின் ஆண்டுவிழா நிகழ்வுகள் நடத்தப்பெற திட்டமிடப்பெற்றுள்ளது.
கருத்தரங்கக் குழுவினர்
செட்டிநாட்டு இளவல் எம்.ஏ.எம்.ஆர்  முத்தையா, திரு. அரு.வே. மாணிக்கவேலு, திரு.த. இராமலிங்கம்,  திருமதி விசாலாட்சி கண்ணப்பன், கம்பன் அடிசூடி பழ. பழனியப்பன், முனைவர் சொ. சேதுபதி, முனைவர் இரா. குறிஞ்சி வேந்தன், முனைவர் மு.பழனியப்பன்,  முனைவர் சே. செந்தமிழ்ப்பாவை, முனைவர் மா. சிதம்பரம், திரு. மீ. சுப்பிரமணியம், திருமதி அறிவுச் செல்வி ஸ்டீபன், சொ. அருணன்
ஆய்வுத்தலைப்புகள்:
செட்டிநாட்டு இலக்கியங்கள்,   சிற்றிலக்கியங்கள், தலபுராணங்கள், நாட்டுப்புற இலக்கியங்கள் மற்றும் பிற செட்டிநாட்டுத் தமிழறிஞர்களும், செட்டிநாடு போற்றிய தமிழறிஞர்களும் -பண்டிதமணி, சிந்நயச் செட்டியார், வ.சுப.மாணிக்கனார், சோம.லெ., முரு.பழ. ரத்தினம் செட்டியார், ச. மெய்யப்பன், சுப.அண்ணாமலை, வெ தெ. மாணிக்கம், தமிழண்ணல், லெ. ப. கரு இராமநாதன் செட்டியார், கம்பனடிப்பொடி, ராய. சொக்கலிங்கனார், ஏ.கே. செட்டியார், சொ. முருகப்பா, சின்ன அண்ணாமலை, சோம. இளவரசு, இரா. சாரங்கபாணி, பா. நமசிவாயம் செட்டிநாட்டுப் படைப்பாளிகளும், செட்டிநாடு போற்றிய படைப்பாளர்களும். பட்டினத்தார், கம்பர், பாடுவார் முத்தப்பர், மகாவித்வான் மீனாட்சி சுந்தரம்பிள்ளை, புதுவயல் சண்முகஞ் செட்டியார், தேவகோட்டை சிதம்பரஞ் செட்டியார், பாரதியார், பாரதிதாசன், வ.உ.சிதம்பரனார், ஜீவா, பனையப்பச் செட்டியார்,  கண்ணதாசன், தமிழ்வாணன், அரு. இராமநாதன், அழ.வள்ளியப்பா, அர. சிங்காரவடிவேலன், சோம. சிவப்பிரகாசம், பெரி. சிவனடியான், பூ.அமிர்தலிங்கனார், முடியரசனார்.செட்டிநாடு சார்ந்த தமிழ் வளர்க்கும் நிறுவனங்கள் கோவிலூர் வேதாந்தமடம், குன்றக்குடி திருமடம்,  பாகனேரி காசி விசுவநாதன் செட்டியார் நூலகம் (தனவைசிய சங்கம்),  ரோஜாமுத்தையா நினைவு நூலகம், மேலைச்சிவபுரி சன்மார்க்க சபை, கணேசர் கலை அறிவியல் கல்லூரி, காரைக்குடி சார்ந்த இந்துமதாபிமான சங்கம்,  இராமசாமி தமிழ்க்கல்லூரி, அழகப்பா அரசு கலைக்கல்லூரி, அண்ணா தமிழ்க் கழகம், வள்ளுவர் கழகம்    கம்பன் கழகம், தமிழ்ச்சங்கம் மற்றும்  புதுவயல் சரசவதி சங்கம், குருவிக்கொண்டான்பட்டி கவிமணிமன்றம், பி. அழகாபுரித் தமிழ்மன்றம், குமரன், தனவணிகன், தமிழ்நாடு, தென்றல் போன்ற இதழ்கள். இவை தவிர  கருத்தரங்கத் தலைப்பு சார்ந்த பிற தலைப்புகளிலும் ஆய்வுக் கட்டுரைகள் வழங்கலாம். வாழும் சான்றோரைப் பற்றி எழுதலாம். வாழ்ந்துவருவோர் பற்றி எழுதும்போது அச்சான்றோரின் அனுமதியையும், வழிகாட்டலையும் பெறுவது நலம்.
 ஆய்வுக் கட்டுரை எழுதுவதற்கான நெறி முறைகள்:
ஆய்வுக் கட்டுரையைத் தனியொருவராகத் தமிழிலோ / ஆங்கிலத்திலோ வழங்கலாம்; ஆய்வுக்கட்டுரைகள் முற்றிலும் பேராளார்களின் சொந்த முயற்சியாக இருத்தல்வேண்டும். ஆய்வாளரே அவரின் கருத்துகளுக்குப் பொறுப்பாவார். கட்டுரைத்தேர்வு முதலான அனைத்து நடைமுறைகளிலும் கருத்தரங்க கூட்டு நடவடிக்கைக்குழு எடுக்கும் முடிவே இறுதியானது.ஆய்வுக்கட்டுரைகள் 4 தாளில் இருவரி இடைவெளியுடன் , நான்கு பக்கங்களுக்கு மிகாமல் யுனிகோடு எழுத்துருவில்  கணினி அச்சாக்கி, மின்னஞ்சல் வழி அல்லது குறுவட்டு வடிவில்  அனுப்பவேண்டும்..கருத்தரங்கு குறித்த அழைப்பு, அவசரச் செய்திகள், குறுஞ்செய்திகளாக கைபேசி / மின்னஞ்சல் வழியாக  அனுப்பப்பெறும். எனவே கட்டாயம் மின்னஞ்சல் முகவரியைத் தெரிவிக்கவும். கருத்தரங்க ஆய்வாளர்கள் தலைப்புகளைத் தேர்ந்து காரைக்குடி கம்பன் கழக மின்னஞ்சலிலோ, முகநூலிலோ அனுப்பி ஒப்புதல் பெற்றுக்கொள்வது நலம். இதன் காரணமாக ஒரு பொருளையே பலர் எழுதுவது தவிர்க்கப்படும்.
ஆய்வுக் கட்டுரைக்கான கட்டணமும் செலுத்தும் முறை ஆய்வுக்கட்டுரையுடன் ரூ 700 (ரூபாய் எழுநூறு மட்டும்) கட்டணமாகச் செலுத்தப்பெற வேண்டும்.. வெளிநாட்டுப் ஆய்வாளர்களுக்குக் கட்டணம் அமெரிக்க டாலர் மதிப்பில் $ 60/= கருத்தரங்கிற்கான கட்டணங்கள் காரைக்குடியில் மாற்றத்தக்க (Crossed Bank Demand Draft) குறுக்குக்கோடிட்ட வங்கிவரைவோலையாக “KAMBAN ACADEMY” என்றபெயருக்கு Registered Post / Speed Post / Courier Mail மூலமாக அனுப்பி உதவிட வேண்டுகிறோம்.
ஆய்வுக்கட்டுரை அனுப்பிட கடைசி நாள் 28-02-2017
பதிவுப் படிவத்தில் இருக்க வேண்டிய தகவல்கள்-   பெயர்கல்வித்தகுதிதற்போதையபணி,   பணியிட  முழு  முகவரி  (அஞ்சல் குறியீட்டு எண்ணுடன்),  இல்லமுழுமுகவரி:     (அஞ்சல் குறியீட்டு எண்ணுடன்) ,  கைபேசி எண்:     (கட்டாயம் சுட்டப்பெறல் வேண்டும்)  ,  e-mail id  (மின்னஞ்சல்) (கட்டாயம் சுட்டப்பெறல் வேண்டும்.) கட்டுரைத்தலைப்பு, கட்டணத்தொகை: வரைவோலை எடுத்த வங்கியின்பெயர்வரைவோலைஎண்,  இடம். நாள்:கையொப்பம்
கருத்தரங்கத்திற்கான தொடர்பு முகவரி Kamban Adisudi Pala Palaniappan, secretary, Kamban Academy, "Sayee" 1E, Chettinadu Towers, 5, Valluvar Salai, Subramaniyapuram North, Karaikudi 630002, Tamilnadu, India மின்னஞ்சல்: kambantamilcentre@gmail.com, வலைப்பூ; kambankazhagamkaraikudi.blogspot.com முகநூல்: https://www.facebook.com/ karaikudi.kambankazhagam

செல்பேசி முனைவர் மு, பழனியப்பன் 9442913985, முனைவர் மா. சிதம்பரம் 9486326526