சனி, 4 ஜூலை, 2009

கம்பன் அடிப்பொடி கலைக்களஞ்சியம்


கம்பன் அடிப்பொடி அவர்களின் வெளிவராத பல கட்டுரைகளின் தொகுப்பாகவும், பல அறிஞர்கள் கம்பனடிப்பொடி அவர்களைப் பற்றி எழுதிய உரைகளின் தொகுப்பாகவும் அமைந்து விளங்குகிறது இக்கலைக்களஞ்சியம்.


கல்வண்ணம், கலை வண்ணம், கவி வண்ணம், தமிழ் வண்ணம், கம்பன் தமிழ் வண்ணம், வரலாற்று வண்ணம், பணிவண்ணம், தனிவண்ணம், தொட்ட துறை வண்ணம், கம்பன் பணி வண்ணம் எனப்பல வண்ணங்களில் கம்பனடிப் பொடியை இந்நூலுள் காணமுடிகிறது.

சென்னை, பவளக்காரத்தெரு, உமா பதிப்பகம் மிகச் சிறந்த கட்டமைப்புடன் இந்நூலை உருவாக்கியுள்ளது. இதன்விலை 150/ ருபாய்

கருத்துகள் இல்லை: