வியாழன், 9 ஏப்ரல், 2009

கம்பனையே குருவாகக் கொண்டு

கிருங்கை சேதுபதி
கம்பனையே குருவாகக் கொண்டுகம்பன் வாழ்க!கம்பன் புகழ் வாழ்க!கன்னித் தமிழ் வாழ்க!என்ற முழக்கத்துடன் உலகெங்கும் கம்பனின் மெய்யுருவை உணர்த்தக் கம்பன் திருநாளைக் காரைக்குடியில் தொடங் கியவர் கம்பன் அடிப்பொடி. அப்பணி இன்றளவும் இனியும் தொடரக் காரணமாகி, அதற்குரிய அனைத்துத் திட்டங்களையும் வடிவமைத்து வழங்கியிருக்கின்றார்.06-06-1908 அன்று காரைக்குடி சாமிநாதன், நாச் சம்மை தம்பதியர்க்கு மகவாகத் தோன்றிய இவர், சிறந்த காந்தியவாதி. சமூகச்சீர்திருத்தவாதி. 1933ஆம் ஆண்டு ரங்கூனில் இருந்து வெளிவந்த ‘தனவணிகன்’ என்னும் இதழில், “இளைஞர்களும் சீர்திருத்தமும்” என்ற தலைப்பில் திரு.வி.க நடைமரபில் கட்டுரையொன்றை (கம்பன் அடிப்பொடி) கணேசன் எழுதி வெளியிட்ட போது, அவருக்கு வயது 25. பர்மாவில் , ரங் கூனில் வசித் துவந்த காலத்தில் அங்கு நண்பர்களுடன் சேர்ந்து, ‘தன வைசிய இளைஞர் தமிழ்ச்சங்கம்’ என்ற அமைப்பைத் தொடங்கி, ஞாயிறுதோறும் சொற்பொழிவுகள் நடத்தியும் வந்திருக்கின்றார் கம்பன் அடிப் பொடி.வடமொழி மற்றும் ஆங்கில மொழிகளில் புல மையுடைய கம்பன் அடிப்பொடி, முறையாய்க் கல்லூ ரியிலோ, பல்கலைக் கழகங்களிலோ சென்று கற்றவர் அல்லர். கம் பனையே தம் குருவாகக் கொண்டு கல்வியில் பெரியரானவர். சிற்ப சாத்திரம், தாவரவியல், அறிவியல், அரசியல், புவி யியல், வரலாற்றியல், பொருளியல், சமையற் கலை உள்ளிட்ட கலை களிலும் தேர்ந்த புலமை யுடைய கம்பன் அடிப் பொடி, நல்ல எழுத் தாளர், கவிஞர். உறவுகள் பேணு வதில் ஒப்பற்ற பண்பா ளர்.விருந்தோம்பல் பண் பில் சங்கத் தமிழ் மரபி னைச் சமகாலத்தில் நிறு வியவர்.ஒருமுறை, பம்பாயி லிருந்து, நாமக்கல் கவிஞ ருடன், கம்பன் அடிப் பொடியும், அவரது உற வினர் ஆத்தங்குடி பெ.மு. சுப்பையாவும் சென்னைக்கு ரயி லில் வந்து கொண்டிருந்த போது, உரத்தக் குரலில் பேசிக் கொண்டிருந்தனர். அது பொறாத ஆங்கிலேயர் ஒருவர் இந்திய, ஆங்கில ஏற்றத் தாழ்வுணர்ச்சியுடன் கண்டிக்கத் தொடங்கினார். அவரிடம் கம்பன் அடிப்பொடி, தம் சகோதரரின் காதுமந்தச் செய்தியைக் குறிப்பிட்டுச் சொல்லி விளக்கினார். எனினும் கேளாது கண்டிக்கத் தொடங்கினார் அவ்ஆங்கிலேயர். உடனே அவரை எதிர்த்து வந்தே மாத ரம் என்று கோஷமிட ஆரம்பித்து விட்டனர் மூவரும். அதனைக்கேட்ட ரயில் பயணிகள் அனைவரும் அவ் வாறே பதிலுக்கு முழக்கமிட அடுத்த நிறுத்தத்தில் அவ் ஆங்கிலேயர், பயணத்திற்கு இடைஞ் சல் செய்கிறார் என்று கூறி இறக்கிவிட்டிருக்கின்றார்கள் எனில், அவ ரது துணிச்சல் எத்தகையது என்பது புரி படும். அதனால் தான், தடையை மீறிக் கூட்டத்திற்குச் சென்ற அவரைச் சுட்டுவிடுவேன் என்று மிரட்டிய ஆங்கிலேயரிடம் தமது சட்டையைக் கிழித்துக் காட்டிச் `சுடுங்கள்’ என்று சொன்னதோடு, அன்றி லிருந்து சட்டையணியாதவராகத் தம்மை மாற்றிக் கொண்டுவிட்டார்.எழுத்து, பேச்சோடு மட்டும் நில்லாது, செயலிலும் வல்லவரான கம்பன்அடிப்பொடி, எந்த நிலையிலும் தன் னலத்தையோ, தம்புகழையோ விரும்பாதவர். தேசம் விடு தலை பெற்ற பின்னர் வழங்கிய நிலத்தையோ, தியாகி களுக்கான பரிசு, பாராட்டு மற்றும் பண உதவியையோ வேண்டாம் என்று மறுத்த அவர், தம் மணிவிழாவைக் கொண்டாடவும் மறுத்தவர். அதனால்தானோ என்ன வோ, அவர்தம் நூற்றாண்டு விழாவும் உரிய ஆண்டில் கொண் டாடப்பெறாது, அடுத்த ஆண்டில் நடக்கின் றது. அதுவும் அவர் உருவாக்கிய கம் பன் கழகத்தின் 71ம் ஆண்டு கம்பன் திருநாள் விழாவில் நிழற்படக் கண் காட்சியாக, அவர்தம் அருமை மாணாக்கர் கணபதிஸ் தபதி அவர்கள் வடித்திருக்கும் கவினார் சிலைத் திறப்பு விழாவாக, காரைக்குடி கம்பன் கழகத்திற்கு இணைச் செயலராக அவர் கண்டு தந்த கம்பன் அடிசூடி (பழ. பழனியப்பன்) தொகுத்தளிக்கும் கம்பன் அடிப்பொடிக் கலைக் களஞ்சியம், அஞ்சல் தலை, அருந்தமிழ்நூல்கள் ஆகியன வெளியீடு செய்யும் விழாவாக 5-4-09அன்று கொண்டாடப்பட்டது.-கட்டுரையாளர் : புதுச்சேரி பாரதிதாசன் அரசினர் மகளிர் கல்லூரியின் தமிழ் விரிவுரையாளர்.
நன்றி தீக்கதிர்

கருத்துகள் இல்லை: