காரைக்குடி கம்பன் கழகத்தின் நவம்பர் 2011 மாதக் கூட்டம் 5-11-2011 அன்று நடைபெற உள்ளது. அனைவரும் கம்பன் மணிமண்டபத்திற்கு 6 மணியளவி்ல் வந்து சேரவேண்டியது. தேவகோட்டை புனித சின்னப்பர் கல்வியியல்கல்லூரியின் கணினி அறிவியல் துறை மாணாக்கி செல்வி வீ.பிரபா கம்பனில் இளைய தலைமுறை என்ற தலைப்பிலும், காரைக்குடி அழகப்பா பல்கலைக் கழக தமிழாய்வுத் துறை இணைப் பேராசிரியர் முனைவர் சே. செந்தமிழ்ப்பாவை அவர்கள் கம்பனில் இலக்கிய மரபும் மாற்றமும் என்ற தலைப்பிலும் உரை நிகழ்த்த உள்ளனர். கம்பன் புகழ்பாடிக் கன்னித்தமிழ் வளர்க்க அனைவரும் வந்திட அன்புடன் வேண்டுகின்றோம்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக