திங்கள், 15 மார்ச், 2021

காரைக்குடி கம்பன் கழகம் நடத்தும் கம்பன் திருவிழா 2021 அழைப்பிதழ்

  கம்பன் கழகம் காரைக்குடி

அன்புடையீர் 
வணக்கம் 
இவ்வாண்டு காரைக்குடி கம்பன் கழகம் நடத்தும் கம்பன் திருவிழாவின் அழைப்பினை இதனுடன் இணைத்துள்ளோம். எதிர்வரும் மார்ச் திங்கள் 26,27, 28, 29 ஆகிய நாள்களில் காரைக்குடி கிருஷ்ணா திருமண மண்டபத்திலும், நாட்டரசன் கோட்டை கம்பன் அருட்கோயிலிலும்  இவ்விழாக்கள் நடைபெற உள்ளன. தாங்கள் இவ்வி்ழாவில் கலந்து கொண்டுச் சிறப்பிக்க வேண்டுகிறே்ாம். 
மேலும் இவ்வழைப்பினைத் தங்கள் இணையப் பகுதியில் வெளிட்டு உதவ அன்புடன் வேண்டுகிறோம். 











அழைப்பின் காணொளித் தொடுப்பு
 https://youtu.be/GKPymPTDGtQ
கம்பன் திருவிழாவில் வெளியிடப்பெறும் நூல்களின் பட்டியல் காணொளித் தொகுப்பு 
அழைப்பு  இணைப்பில் உள்ளது 






புதன், 4 டிசம்பர், 2019

காரைக்குடி கம்பன் கழகத்தின் போட்டி 2020

காரைக்குடி கம்பன் கழகத்தின் சார்பில் ஆறு ஏழு எட்டு ஆம் வகுப்பு பயிலும் மாணாக்கருக்கான ஒப்பித்தல் போட்டி

காரைக்குடி கம்பன் கழகத்தின் சார்பில் ஆறு ஏழு எட்டு ஆம் வகுப்பு பயிலும் மாணாக்கருக்கான ஒப்பித்தல் போட்டி ஜனவரி நான்காம் தேதி நடைபெற உள்ளது காலை ஒன்பதரை மணிக்கு தொடங்கும் இந்நிகழ்ச்சியில் அனைத்து பள்ளி மாணாக்கர்களும் கலந்து கொள்ளலாம். அறிவிப்பும் பாடலும் கீழே இணைப்பில் உள்ளது வருக கம்பன் புகழ் பாடி கன்னித்தமிழ் வளர்ப்போம்




 காரைக்குடி கம்பன் கழகத்தின் அனைத்துக் கல்லூரி மாணவர்களுக்கான பேச்சுப்போட்டி 4 1 20 அன்றுகாரைக்குடி கார்த்திகேயன் பள்ளியில் இரண்டரை மணிக்கு நடைபெற உள்ளது கல்லூரி மாணவர்கள் அனைவரும் கலந்து கொள்ள வேண்டும்

செவ்வாய், 7 ஆகஸ்ட், 2018

கண்ணீர் அஞ்சலியுடன் காரைக்குடி கம்பன் கழகம்

கம்பன் அடிப்பொடி சா. கணேசனாரின் தமிழ்த்தாய் கோயில் எண்ணத்தை நிறைவேற்றித் தந்த முத்தமிழ் அறிஞர் டாக்டர் கலைஞர் மு. கருணாநிதி அவர்களின் மறைவு தமிழ் இலக்கிய உலகிற்கு ஈடு செய்ய இயலாத பேரிழப்பாகும். அவரின் பிரிவால் வாடும் அவரின் குடும்பத்தாருக்கு எம்முடைய ஆழ்ந்த இரங்கல்கள். 
கண்ணீர் அஞ்சலியுடன் காரைக்குடி கம்பன் கழகம்